உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தேரோட்டத்திற்கு பிறகு அவினாசி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை தொடங்க திட்டம்

Published On 2022-04-30 07:18 GMT   |   Update On 2022-04-30 07:18 GMT
கோவில் கோபுரத்தில் செதுக்கப்பட்ட சுவாமிகளின் சிலைகள்நிறம் மங்கியிருப்பதும், கோவில் கும்பாபிஷேகம் செய்யாமல் இருப்பதும், பக்தர்கள் மனதில் வேதனை, ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அவிநாசி:

அவிநாசியின் அடையாளமாக விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேரோட்டம் பிரசித்தம். கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டு இடைவெளிக்கு பின், இந்தாண்டு தேர்த்திருவிழா நடத்தப்பட இருக்கின்றன.

இந்தநிலையில் கோவில் கோபுரத்தில் செதுக்கப்பட்ட சுவாமிகளின் சிலைகள்நிறம் மங்கியிருப்பதும், கோவில் கும்பாபிஷேகம் செய்யாமல் இருப்பதும், பக்தர்கள் மனதில் வேதனை, ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 1980ல் சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

பின், 1991 மற்றும், 2008ல், கும்பாபிஷேகம் நடந்தது. ஹிந்து ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.அவ்வகையில், அவிநாசி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகி விட்டது. 

எனவே, கோவில் திருப்பணிகளை உடனே துவக்கி, கும்பாபிஷேகம் செய்ய இந்து அறநிலையத்துறையினர் முன்வர வேண்டும்' என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், "12 ஆண்டுகளுக்கு மேல், குடமுழுக்கு செய்யப்படாத கோவில்களில் திருப்பணி மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், 'பெயின்டிங்' வேலை தான் பிராதனமாக உள்ளது. திட்ட மதிப்பீடு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சித்திரை தேரோட்டத்தை சிறப்புற நடத்தி முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தேரோட்டம் முடிந்ததும்  திருப்பணி துவங்கும் என்றார்.
Tags:    

Similar News