உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

துணைவேந்தர்கள் நியமனம் - தமிழக அரசுக்கு இந்து இளைஞர் முன்னணி கண்டனம்

Update: 2022-04-29 09:58 GMT
கல்வியின் தரத்தையும், கல்லூரிகளின் மாண்பையும் சீர்குலைக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது.
திருப்பூர்:

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு, இந்து இளைஞர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து இளைஞர் முன்னணி மாநில செயலாளர் சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து கல்வித்துறையில் திராவிட சார்பு, கடவுள் மறுப்பு கருத்தியல் சார்ந்த நபர்களை நியமித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது பல்கலை துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது உயர்கல்வி துறையில் அரசியலை புகுத்தி, தங்களுக்கு வேண்டிய நபர்களை நியமிக்கின்றனர்.

இதன்மூலம், கல்வியின் தரத்தையும், கல்லூரிகளின் மாண்பையும் சீர்குலைக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது. மேலும் லஞ்ச லாவண்யத்துக்கும், ஊழலுக்கும் வழி வகுத்து உயர் கல்விதுறையை வியாபார கூடாரமாக மாற்றிவிடும் நிலையை உருவாக்கும். 

துணைவேந்தர்களை ஆளுங்கட்சி நியமிக்கும் நடைமுறை என்பது மாணவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையும் சீரழிக்கும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News