உள்ளூர் செய்திகள்
வேப்பேரி போக்குவரத்து சந்திப்பில் பொதுமக்களுக்கு தினமும் 50 லிட்டர் மோர் வழங்கப்படுகிறது

வேப்பேரி போக்குவரத்து சந்திப்பில் பொதுமக்களுக்கு தினமும் 50 லிட்டர் மோர் வழங்கப்படுகிறது

Update: 2022-04-28 09:47 GMT
வேப்பேரி போக்குவரத்து சந்திப்பில் பொதுமக்களுக்கு 2 மாதத்துக்கு மோர் வழங்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் கோடை வெயில் வாட்டி எடுப்பதையடுத்து போக்குவரத்து போலீசார் சார்பில் தினமும் மோர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் ஆகியோரது உத்தரவின் பேரில் வேப்பேரி கமிஷனர் அலுவலக சந்திப்பில் மோர் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.

இதில் உதவி கமிஷனர் கிறிஸ்டோபர், வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினர்.

2 மாதத்துக்கு மோர் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்காக 50 லிட்டர் மோர் வேப்பேரி சந்திப்புக்கு தினமும் வரவழைக்கப்பட்டு பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்துதது.

இன்று காலையில் சாலையில் சென்ற 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் மோர் வாங்கி குடித்தனர்.
Tags:    

Similar News