உள்ளூர் செய்திகள்
வைகோ

பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்- வைகோ

Published On 2022-04-28 09:42 GMT   |   Update On 2022-04-28 09:42 GMT
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பாவேந்தர் பாரதிதாசன் தம் வாழ்நாள் எல்லாம் தமிழுக்காகப் போராடினார். அவரது பிறந்தநாளை, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று, அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியர் வீரமணி அருமையான கோரிக்கையை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பு வைத்தார்.

யாரும் கேட்காமலேயே, தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் ஆகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாள் ஆகவும் அறிவித்து, அரசு ஊழியர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து வரலாறு படைத்த முதல்-அமைச்சர், ஆசிரியர் வீரமணியின் கோரிக்கையை ஏற்று, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும். அந்த எழுச்சியின் அடிப்படையில், எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்... இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்று உறுதி பூணுவதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News