உள்ளூர் செய்திகள்
இருபெரும் விழா நடைபெற்ற போது எடுத்தப்படம்.

வாசுதேவநல்லூர் அருகே வியாசா கல்லூரியில் இருபெரும் விழா

Published On 2022-04-22 07:23 GMT   |   Update On 2022-04-22 07:23 GMT
வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இருபெரும் விழா நடைபெற்றது.
சிவகிரி:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 2017-2020 ஆண்டு மாணவி-யருக்கான பட்டமளிப்பு விழாவும், 5-வது கல்லூரி ஆண்டு விழாவும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி கலந்து கொண்டு மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மாணவிகள் வருங்கால சவால்களைச் சமாளிக்கும் விதமாக மாற்றி யோசனை செய்து, வாழ்வில் பல்வேறு துறைகளிலும் முன்னேறி உயர வேண்டும் என்று கூறினார்.

மாலையில் கல்லூரியின் 5-ம் ஆண்டு விழா நடைபெற்றது. எழுத்துனர், கலைஞர் தொலைக்-காட்சியின் செய்திப்பிரிவு தலைவர் திருமாவேலன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கல்வி, கலை, பல்கலைக்கழக அளவில் ரேங்க் வாங்கிய மாணவியருக்கும் பல்வேறு துறைகளில் சிறப்பினை காட்டிய பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெற்றோர், பொதுமக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என திராளானோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் வரவேற்றார்.  துணை சேர்மன் பிரகாசவல்வி சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார்.

கல்லூரி மாணவியர் பேரவைத் தலைவி நமீலா நன்றி கூறினார். சேர்மன் வெள்ளத்துரைப் பாண்டியன், நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய், செயலாளர் சுந்தர் முன்னின்று இருபெரும் நிகழ்வுகளையும் நடத்தினர்.

 பேராசிரியர்கள், பிற பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினர்.
Tags:    

Similar News