உள்ளூர் செய்திகள்
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் மனு கொடுக்க வந்த பட்டதாரி வாலிபர்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-04-21 10:15 GMT   |   Update On 2022-04-21 10:15 GMT
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூடங்குளம் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தமையில் கூடங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பட்டதாரி வாலிபர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம், ராதாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்களிடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டு கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது.

1999-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடந்த கூட்டத்தில் நிலம் வழங்கியவர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் தற்போது வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணு உலை பணிகள் நடந்து வருகிறது. இதில் பணிபுரிவதற்கு 600 காலியிடங்கள் உள்ளன.

காலியாக உள்ள இந்த பணியிடங்களை நிரப்புவதற்-காக ராஜஸ்தான், மும்பை உள்ளிட்ட பகுதியில் நேர்முக தேர்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ராதாபுரம் பகுதியை சேர்ந்த 50 பேர் நிராகரிக்கப்பட்டனர். தொடர்ந்து வடமாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

எனவே ராதாபுரம், கூடங்குளம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நிலம் வழங்கியவர்களுக்கு அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில் முன்-னுரிமை அளிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

அப்போது தி.மு.க. மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வ சூடாமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News