உள்ளூர் செய்திகள்
.

சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு வங்கி மூலம் கிசான் கார்டு

Published On 2022-04-21 10:09 GMT   |   Update On 2022-04-21 10:09 GMT
சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு வங்கி மூலம் கிசான் கார்டு வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 82 விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டத்தின் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம்  என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கவுரவ நிதியாக பெற்று வருகின்றனர். 

ஆனால், சேலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 475 விவசாயிகளுக்கு மட்டுமே கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளின் மூலம் உழவர் கடன் அட்டை (கிசான் கார்டு) பெறப்பட்டுள்ளது.  

எனவே, பிரதமரின் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும்  பிரதமரின் நிதி கிடைக்க பெறும் வங்கியினை அணுகி உழவர் கடன் அட்டைக்கான படிவத்தினை பூர்த்தி செய்து நில உரிமைக்கான பட்டா, அடங்கல் மற்றும் ஆதார் ஆகிய விபரங்களை சமர்ப்பித்து எளிதாக பெற்றுக் கொள்ளலாம். 
 
மேலும் இணைய-தளத்திலும் உழவர் கடன் அட்டைக்கான படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு விவசாயிகள் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம்  தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News