உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

Published On 2022-04-20 10:25 GMT   |   Update On 2022-04-20 10:25 GMT
ஒரு பள்ளியில் எல்.கே.ஜி., நுழைவு வகுப்பாக இருந்தால் அவ்வகுப்பில் மட்டுமே சேர்க்க முடியும்.
திருப்பூர்:

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் மெட்ரிக் பள்ளி கனவு நனவாக்கப்படுகிறது. இதன்கீழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விருப்பப்படும் தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்பிலிருந்து சேர்ந்து கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு பள்ளியில் எல்.கே.ஜி., நுழைவு வகுப்பாக இருந்தால் அவ்வகுப்பில் மட்டுமே சேர்க்க முடியும். 6-ம் வகுப்பு நுழைவு வகுப்பு எனில் 6-ம் வகுப்பில் சேர்க்க முடியும். அதன்பின், அனைத்து குழுந்தைகளுக்குமான முழு கல்வி கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.

மாணவர் சேர்க்கைக்கு, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர் சேர்க்கை இணையவழியில் இன்று தொடங்குகிறது. மே 18-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News