உள்ளூர் செய்திகள்
சைக்கிள் பேரணி நடைபெற்றது-

சைக்கிள் பேரணி

Published On 2022-04-19 09:30 GMT   |   Update On 2022-04-19 09:30 GMT
தஞ்சையில் தீயணைப்பு வீரர்கள் சைக்கிள் பேரணி மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்:

மும்பை துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி கடந்த 14-ந் தேதியில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிற 20-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தஞ்சை தீயணைப்பு நிலையத்தில் தீத்தடுப்பு குறித்த சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 இதற்கு உதவி அலுவலர் கணேசன், நிலைய அலுவலர் கலைவாணன், நிலைய அலுவலர் (போக்குவரத்து) பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
இந்த பேரணியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பழைய பஸ் நிலையம், ராசாமிராசுதாரர் மருத்துவமனை சாலை, ராமநாதன் ரவுண்டானா, ரெயிலடி வழியாக மீண்டும் தஞ்சை தீயணைப்பு

 நிலையத்துக்கு சைக்கிளில் பேரணியாக வந்தனர். 

பேரணியின் போது தீ விபத்து நடைபெறாமல் தடுப்பது குறித்த செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
Tags:    

Similar News