search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bicycle"

    • முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
    • 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.

    ஆறுமுகநேரி:

    தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.

    இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.

    இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.

    தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.

    இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-

    எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் விவசாயியிடம் காணொலியில் பேசினார்.
    • அப்போது பேசிய மோடி உங்களிடம் டிராக்டர் இருக்கிறது, என்னிடம் சைக்கிள் கூட இல்லை என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசின் விவசாய கடன் அட்டை, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்களையும், பயனாளிகள் அதனை நினைவுகூரும் வகையிலும் விளம்பர பிரசாரம் ஒன்றை நடத்திவருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக சமீபத்தில் கலந்துரையாடினார்.

    ரங்பூர் கிராம சர்பஞ்ச் பல்வீர் கவுர் என்பவருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது விவசாய கடன் அட்டையைப் பயன்படுத்தி டிராக்டர் வாங்கியதைப் பற்றி சர்பஞ்ச் பல்வீர் கவுர் பெருமையுடன் கூறினார்.

    அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, உங்களிடம் டிராக்டர் இருக்கிறது. என்னிடம் சொந்தமாக சைக்கிள்கூட இல்லை என தெரிவித்தார்.

    விளையாட்டில் கால்களை இழந்த12 வயது சிறுவனுக்கு 3 சக்கர சைக்கிள்

    ஆலங்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மறவன்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மனோஜ்(வயது 12). இவன் விளையாடும் போது அவனுடைய இடது கால் பாதிப்படைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவனது ஒரு கால் அகற்றப்பட்டது.

    இந்நிலையில் சிறுவன் மனோஜ் ஆலங்குடி சட்டமன்ற அலுவலகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக அவனுக்கு 3 சக்கர மிதிவண்டி வரவழைத்து வழங்கி ஆறுதல் கூறி உதவித்தொகை அளித்தார்.

    மேலும் சிறுவனுக்கு செயற்கை கால் வழங்கவும், அவனது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

    • முகமதுரிதுவான் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    கடலூர்:

    வடலூர் ஆபத்தாணபுரம் வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் ஹஜ்முகமது மகன் முகமதுரிதுவான் (வயது 15). இவர் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். டியூஷன் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வடலூர் ரெயில்வே கேட்டுக்கு முன் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி யதில் பலத்த காயமடைந்த முகமது ரிதுவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.
    • புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் சிவன்கொல்லை தங்கத்தாய் காலனியைச் சேர்ந்தவர் நாகூர் பிச்சை (வயது 58).

    சம்பவத்தன்று இவர் சைக்கிளில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த நாகூர் பிச்சையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கபடி போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை யாசிரியர் வெங்கடசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன், அபிநயா அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 78 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமால்வளவன் நன்றி கூறினார்.

    பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

    விழாவில் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.

    • முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
    • 63 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியில் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் யோகீஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 63 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.

    • இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்ப ட்டோர் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது.
    • 8 நபர்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் வழங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மசூதிகளில் பணிபுரியும் உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்ப ட்டோர் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நல அலுவலர் முகுந்தன் வரவேற்றார்.

    சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 35 உலமா க்களுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 8 நபர்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,பேரூராட்சி கவுன்சிலர் நூர்ஜகான் பெரும்புகை ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், விடுதி காப்பாளர்கள் சங்கர், ரவி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 

    • ராஜகிரி ஊராட்சி தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் வரவேற்றார்.
    • முடிவில் ஆசிரியர் முத்தழகன் நன்றி கூறினார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் காசிமியா மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைப்பெற்றது. ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் வரவேற்றார்.

    பள்ளி மேலாண்மை குழு தலைவரும், சக்கராப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரும், பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளருமான நாசர் தலைமையேற்று சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கி விழாவினை தொடங்கி வைத்தார்.

    சட்ட மன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தம், மாவட்ட கவுன்சிலர் பாத்திமாஜான் ராயல் அலி, தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபாண்மை நல உரிமைப் பிரிவு தலைவர் யூசுப் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் கலியமூர்த்தி , முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஷ்ரப் அலி, மூத்த உறுப்பினர் இராஜகிரி பாலு, ம.ம.க தொகுதி தலைவர் கலீல், தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ராஜகிரி திமுக நிர்வாகிகள் அண்ணாதுரை, ஆனந்தன், சிவமுதலி, முகம்மது உசேன், ராஜேஷ், ஷாஜஹான் , ஹாஜாமைதீன், மஸர்ரத் சாதிக், அப்துல் மாலிக், சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிக்கந்தர் பாட்சா கௌஸ்மைதீன், சித்ரா சுப்ரமணியன், ஊராட்சி செயலர் ஜெயக்கு மார், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் முத்தழகன் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாட்டினை ஜே.ஆர்.சி கவுன்சிலர் மணிகண்டன் செய்திருந்தார்.

    • சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.
    • அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவ ரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சத்யமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
    • பாடப் பகுதிகளை அன்றைய தினமே புரிந்து படித்து எழுதி பார்த்தல் வேண்டும்

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாணவர் நல் நூலகர் ஆசைத்தம்பி வரவேற்றார்.

    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாரிமுத்து எம்.எல்.ஏ. வழங்கி பேசுகையில்:-தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

    இன்றைய சூழ்நிலையில் பல்வேறு விதமான ஊடகங்களை பயன்படுத்தி கல்வியில் மட்டுமல்லாது சமுதாய சேவைகள் சமுதாயத்தோடு பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படுதல் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளுதல் அன்றைய தினம் நடத்தப்படும் பாடப் பகுதிகளை அன்றைய தினமே புரிந்து படித்து எழுதி பார்த்தல் வேண்டும்.பெற்றோர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் .

    விளையாட்டு, கலை இலக்கியம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறும் வகையில் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    முறையான பயிற்சி கடுமையான முயற்சியின் மூலம் அனைவருமே அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருக்க வேண்டும் என்றார். முடிவில் ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

    • 907 மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ஆயங்குடி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள் , எல்.எம்.சி , ஆயங்குடிபள்ளம் வேங்கடேசா , கோதண்ட புரம் ராமகிருஷ்ணா , திருவெண்காடு சு.சு.தி.ஆண்கள் ஆகிய 6 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். ச.மு.இ. பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர் நித்தியாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியை கீதா வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று மாணவ -மாணவிகள் 907 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புறையாற்றினார்.

    இதில் பள்ளி தலைமைஆசிரியர்கள் செல்வகுமாரி (எல்.எம்.சி பள்ளி), அருளரசன் (இராம கிருஷ்ணா), நடராஜன் (சு.சு.தி.பள்ளி) மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முடிவில் ஆயங்குடிபள்ளி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

    ×