உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மானூரில் இன்று காலை பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

Update: 2022-04-17 09:23 GMT
மானூர் அருகே உள்ள கட்டாரங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
நெல்லை:

மானூர் அருகே உள்ள கட்டாரங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சூசை. இவரது மனைவி லீலா (வயது 58). இவர் இன்று காலை தனது உறவினரை பார்ப்பதற்காக தனியார் பஸ்சில் மானூருக்கு சென்றார். மானூர் பழைய யூனியன் அலுவலகம் அருகே வரும்போது பஸ் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

இந்நிலையில் பஸ் நிறுத்தம் தான் வந்து விட்டது என்று நினைத்த லீலா பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்த அவரை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை எடுத்து விட்டார்.

இதனால் லீலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின் டயர் லீலா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லீலா உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News