உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மருத்துவ சேவை பணிக்கு டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம்

Update: 2022-04-15 07:37 GMT
வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பங்கள், ‘மாநகராட்சி நலச் சங்கம், மாநகராட்சி அலுவலகம், திருப்பூர்’ என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
திருப்பூர்:

மருத்துவ சேவை பணிக்கு டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் மாநகராட்சியில் 3 ஆரம்ப சுகாதார மையங்களில் பல்துறை சிறப்பு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. 

இதில் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை பகுதி நேரமாக பணியாற்ற மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவம் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வருகிற 30-ந்தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்கள், ‘மாநகராட்சி நலச் சங்கம், மாநகராட்சி அலுவலகம், திருப்பூர்’ என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். 

இதற்கு மதிப்பூதியம் நாளொன்றுக்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை வழங்கப்படும்.

பொது மருத்துவம் (திங்கட்கிழமை), மகப்பேறு மருத்துவர் (செவ்வாய்), குழந்தை நலம் மற்றும் கண் மருத்துவர் (புதன்); கண் தோல், காது மூக்கு தொண்டை மருத்துவம் (வெள்ளி), எலும்பு மருத்துவர் (வியாழன்), மனநலமருத்துவர் (சனிக்கிழமை) என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.  
Tags:    

Similar News