உள்ளூர் செய்திகள்
.

சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.62 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

Published On 2022-04-14 09:39 GMT   |   Update On 2022-04-14 09:39 GMT
சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.62 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மா-பேட்டை, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆத்தூர், தம்மம்பட்டி என 11 உழவர்சந்தைகள் உள்ளன. இதை தவிர 30-க்கும் மேற்பட்ட தினசரி சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகள்   இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 11 உழவர் சந்தைகளில் ரூ.62 லட்சத்து 62 ஆயிரத்து 830-க்கு காய்கறிகள், பழங்கள் விற்றது. குறிப்பாக ஆத்தூர் உழவர் சந்தையில் மட்டும் 11 லட்சத்து 93 ஆயிரத்து 663 ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது.

சேலம் மாநகரத்தில் சூரமங்கலம் உழவர் சந்தையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 295 ரூபாய்க்கும், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் 10 லட்சத்து 33 ஆயிரத்து 439 ரூபாய்க்கும் காய்கறிகள், பழங்கள் விற்பனையானது. அதுபோல் மாவட்டத்தில் உள்ள தினசரி சந்தைகள், காய்கறி சந்தைகளிலும் பல லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றது.

இதனிடையே சேலம் வேளாண் துணை இயக்குநர் உழவர் சந்தைகளை ஆய்வு  செய்தார். ஆய்வின் போது விவசாயிகளிடம்  விலை நிர்ணயம், கடைகள் ஒதுக்கீடு, காய்கறிகள் மற்றும் பழங்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும்  நூகர்வோரின் குறைகள்  கேட்டறிந்து அலுவலர்-களுக்கு அறிவுரைகள்  வழங்கினார். 

சந்தை வளாகத்தையும், கழிவறைகளையும் தூய்மை யாக வைத்திருக்க அறிவுறுத்-தினார்.  பதிவேடுகள் பராமரிப்பு, காய்கறிகள் தரம் பிரித்தல் மற்றும் விலை பட்டியல்கள் ஆய்வு செய்தும் அறிவுரைகள்   வழங்கினார்.
Tags:    

Similar News