உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சிட்பி வங்கி மூலம் ரூ.225 கோடி கடன் உதவி

Published On 2022-04-12 07:24 GMT   |   Update On 2022-04-12 07:24 GMT
பின்னலாடை உற்பத்தி சார்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியின்(சிட்பி) 32ம் ஆண்டு விழா திருப்பூர் - அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டியில் உள்ள பப்பீஸ் ஓட்டலில் நடந்தது.’சிட்பி’ திருப்பூர் மாவட்ட கிளை உதவி பொதுமேலாளர் கான் பேசியதாவது:

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்து, அந்நிறுவனங்களை வலிமைப்படுத்திவருகிறது ‘சிட்பி’ வங்கி. இவ்வங்கி துவங்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திருப்பூரில் ‘சிட்பி’ வங்கி கிளை துவங்கப்பட்டு, 25 ஆண்டுகளாகிறது. 

பின்னலாடை உற்பத்தி சார்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-22ம் நிதியாண்டில், திருப்பூர் கிளை மூலம் ரூ. 225 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான கடன் இலக்கு விரைவில் அறிவிக்கப்படும். அரைஸ்’ (மூலதன முதலீட்டுக்கான புத்தாக்க உதவி) என்ற திட்டம் முக்கியமானதாக உள்ளது.

இந்த திட்டத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அதிநவீன மெஷினரிகள் வாங்குவதற்காக 5.5 முதல் 6.8 சதவீத வட்டியில் ரூ.5 கோடி வரை பிணையமின்றி கடனுதவி வழங்கப்படுகிறது.’சிட்பி’யின் திட்டங்களை பயன்படுத்தி, தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை மேம்படுத்தி, வளர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
Tags:    

Similar News