உள்ளூர் செய்திகள்
போடி பரமசிவன் கோவில் சித்திரைத் திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது.

போடி பரமசிவன் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

Published On 2022-04-11 08:27 GMT   |   Update On 2022-04-11 08:27 GMT
போடி பரமசிவன் கோவிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்ற நிகழச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
போடி:

தென் திருவண்ணாமலை என்று அனைவராலும் போற்றப்படும் தேனி மாவட்டம் போடி பரமசிவன் கோவில் சித்திரைத் திருவிழா-கொடியேற்றம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன் தலைமையில் பெரியாண்டவர் கோவிலில் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்பு கோவில் கொடிமரம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பக்தி பரவசத்துடன் எடுத்துச் சென்று மலைமேல் உள்ள பரமசிவன் கோவில் வளாகத்தை அடைந்தனர்.

அங்கு சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு மந்திரங்கள் ஓதி கொடியை ஏற்றினார்கள். மூலஸ்தானத்தில் உள்ள பரமசிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.

விழாவில் அர்ச்சகர்கள் சுந்தரம், பரமசிவம், போடி நகராட்சி புதிய தலைவர் ராஜராஜேஸ்வரி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சங்கர், அன்னதான அறக்கட்டளை செயலாளர் பேச்சிமுத்து,

இளைய ஜமீன்தார் பொருளாளர் முத்துராஜ், வர்த்தக சங்கத் தலைவர் வேல்முருகன் மற்றும் அன்னதான கமிட்டி நிர்வாகிகள் நகரின் முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள், சிவ பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News