உள்ளூர் செய்திகள்
குற்றாலம் மாலை பகுதியில் பற்றிய தீயை வனத்துறையினர் அணைத்த காட்சி.

குற்றாலம் அருகே மலையில் மீண்டும் பற்றிய தீ அணைப்பு

Update: 2022-04-08 09:18 GMT
குற்றாலம் அருகே மலை பகுதியில் மீண்டும் பற்றிய தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாச-முத்திரம் வனக்கோட்டம் கடையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கடையம் பீட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ வனத்துறையினரால் முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றாலம் அருகே உள்ள மத்தாளம்பாறை பீட்கெண்டி ஊத்து பகுதி மலையில் நேற்று மாலையில் மீண்டும் திடீரென தீ பற்றியது தீ மளமளவென அப்பகுதியிலுள்ள புற்களின் மீது பரவியது.

இது சம்பந்தமாக கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதைக்கு தகவல் தெரிவித்து . துணை இயக்குனர்  செண்பகபிரியா உத்தரவின்படி, களப்-பணி-யாளர்-கள் மற்றும் கூலி ஆட்கள் நான்கு தனி குழுவாக புறப்பட்டு கூவாபுல் மரங்களில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பல மணி நேரத்திற்கு பின்னர் களப்பணியாளர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Tags:    

Similar News