உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க சீசன் டிக்கெட்

Published On 2022-04-06 10:00 GMT   |   Update On 2022-04-06 10:00 GMT
கோவை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஈரோட்டில் இருந்து கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பருக்கு பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 3 மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் சீசன் டிக்கெட் வழங்கப்படுமா? என பயணிகள் பலர் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் சீசன் டிக்கெட் பெற விரும்புபவர்கள் ஈரோடு, திருப்பூர், கோவை ரெயில் நிலையங்களில் ஆதார் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வழங்கி விண்ணப்பிக்கலாம்.

தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, வஞ்சிபாளையம், சோமனூர், சூலூர், இருகூர், பீளமேடு, கோவை வடக்கு நிலையங்களிலும் விண்ணப்பிக்க முடியும் என்று சேலம் கோட்ட ரெயில்வே அறிவித்துள்ளது.

’இதற்கு முன் திருப்பூரில் இருந்து கோவை செல்ல மாதாந்திர சீசன் கட்டணம் 270 ரூபாயாக இருந்தது. தற்போது 350 ரூபாயாக இருக்கும். ஒவ்வொருவர் பயணிக்கும் தூரத்துக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News