உள்ளூர் செய்திகள்
சிவகிரி பகுதியில் தொழிலாளர்களுக்கு இரவு நேர ரத்த தடவல் முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சிவகிரியில் வடமாநில தொழிலாளர்கள் 128 பேரின் ரத்தம் பரிசோதனை

Update: 2022-04-04 09:44 GMT
சிவகிரி பகுதியில் யானைக்கால் நோய் பாதிப்பு உள்ளதா? என கண்டறிய வடமாநில தொழிலாளர்கள் 128 பேரின் ரத்தம் பரிசோதனை செய்யப்படுகிறது.
சிவகிரி:

சிவகிரி ஊருக்கு மேற்கே கோம்பையாறு, சுனைப்பாறை, உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. 

இவற்றில் மேற்கு வங்காளம், ஒரிசா, அரியானா, ஜார்க்கண்ட், குஜராத் போன்ற பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்ப மாகவும், ஆண், பெண் என தனித்தனியாகவும்,  குழந்தை களோடு சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா காலமாக இருந்து வருவதால் ஆண்டிற்கு இரண்டு முறை இரவு நேரங்களில் மருத்துவத் துறை குழுவினர் சிவகிரிக்கு மேற்கே செங்கல் சூளை பகுதி களில் முகாமிட்டு அனைத்து தொழிலாளர் களையும், நோயாளிகளையும் சந்தித்து மருத்துவம் செய்து வருவது வழக்கம்.

அதன்படி தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் அனிதா உத்தரவின்படி மண்டல பூச்சியியல் வல்லுநர் கிருபா ஆலோசனையின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய் தலைமையில், மருத்துவ குழுவினர் சிவகிரி பகுதியில் செங்கல் சூளையில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு யானைக் கால் நோய் உள்ளதா? என்பதை கண்டறியும் இரவு நேர ரத்த தடவல் முகாம் நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரையிலும் முகாம் நடை பெற்றது.

மனிதனுடைய ரத்தத்தில் நுண்புழுக்கள் இருப்பது குறித்து கண்டறிய இரவு நேர ரத்த தடவல் அவசியமாகிறது. ஆரம்ப நிலையிலேயே நுண் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் நாளடைவில் கைகள், கால்கள், இனப்பெருக்க உறுப்புகள் வீக்கத்தை முற்றிலும் தடுக்க முடியும் என்ற காரணத்தினால் இந்த முகாமில் வட மாநில தொழிலாளர்கள் 128 பேருக்கு ரத்தம் சேகரிக்கப் பட்டு பரிசோதனைக்காக நெல்லை மண்டல பூச்சியியல் குழுமம் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள புலம் பெயர்ந்த தொழி லாளர்களுக்கும் இதுபோன்ற மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறும் எனவும் மருத்துவ குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News