உள்ளூர் செய்திகள்
சோளகம்பட்டி கீழ்பாலத்தை ஆய்வு செய்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

ரெயில்வே கீழ்பாலத்தை சீரமைக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

Published On 2022-04-03 07:20 GMT   |   Update On 2022-04-03 07:20 GMT
சோளகம்பட்டி ரெயில்வே கீழ்பாலத்தை மக்கள் போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் சீரமைக்க வேண்டும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
பூதலூர்:

பூதலூர் ஒன்றியம் சோளகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் சோளகம்பட்டி ரெயில் நிலையம் அருகில் உள்ள கீழ்பாலத்தை சீரமைத்து மக்கள் போக்குவரத்து க்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சோளகம்பட்டி ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ, பூதலூர் ஒன்றியகுழு தலைவர் அரங்கநாதன், வருவாய் துறை, ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகளுடன் சோளகம்பட்டி ரெயில் நிலையம் அருகில் உள்ள கீழ் பாலத்தை பார்வையிட்டனர்.இதையடுத்து கீழ்பாலத்தை இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைத்து சாலை அமைக்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்ற ஆணை வழங்கிய கலெக்டர், எம்.எல்.ஏ, சேர்மன் உள்ளிட்டோருக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். முன்னதாக திருக்காட்டுப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள கிளை நூல் நிலைய த்தை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

உடனடியாக கிளை நூல் நிலையத்தை அருகில் உள்ள பேரூராட்சி சமுதாய கூடத்திற்கு மாற்றம் செய்யவும் உத்தரவிட்டார். புதிய நூலக கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். திருக்காட்டுப்பள்ளி கிளை நூலகத்தில் ஆய்வின் போது திருக்காட்டுப்பள்ளி தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

சுற்று சுவர் கட்ட மதிப்பீடு தயார் செய்து விட்டதாகவும் விரைவில் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். திருக்காட்டுப்பள்ளி நூல் நிலைய ஆய்வின் போது எம்.எல்.ஏ துரை.சந்திர சேகரன், பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன், நூலகத்துறை அதிகாரிகள், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன், பூதலூர் தாசில்தார் பிரேமா, பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா மற்றும் அதிகாரிகள் பேரூராட்சிஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News