உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் 100 சதவீதம் வரி வசூல்

Published On 2022-04-01 09:51 GMT   |   Update On 2022-04-01 09:51 GMT
தமிழகத்தில் முதல் நகராட்சியாக 100 சதவீதம் வரிவசூல் முடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் நகராட்சியின் நடப்பு ஆண்டுக்கான 2021-22ல் சொத்துவரி, குடிநீர் கட்டணம், வணிக வளாக வரி, தொழில் வரி, காலியிட வரி மற்றும் இதர வரியினங்கள் மூலம் அனைத்து வரிகளையும் வசூல் செய்து முடித்துள்ளனர்.

இது குறித்து வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன் குமார், நகராட்சி தலைவர் கனியரசி ஆகியோர் கூறுகையில், நகராட்சிக்கு வரிகள் மூலம் ரூ. 3 கோடியே 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் நகர மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தமிழகத்தில் முதல் நகராட்சியாக 100 சதவீதம் வரிவசூல் முடிக்கப்பட்டுள்ளது  என்றனர்.

முழுமையாக வரி வசூல் செய்து முதலிடம் பிடித்தமைக்காக பில் கலெக்டர், அனைத்து பணியாளர்கள், குடிநீர் வசூல் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மற்றும் தலைவர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Tags:    

Similar News