உள்ளூர் செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு.

உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும்

Update: 2022-03-28 07:05 GMT
பேராவூரணியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை மாநாடு சையது முகமது கனி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை பேராவூரணி ஒன்றிய செயலாளர் துரை.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் வ.ராஜமாணிக்கம் மாநாட்டை துவக்கி வைத்தார். பாரதி வை.நடராஜன் ஸ்தூபியை திறந்து வைத்தார்.

வேலை அறிக்கையை மு.சித்திரவேலு சமர்ப்பித்தார். நிதிநிலை அறிக்கையை காசியார் சமர்ப்பித்தார். தீர்மானங்களை விளக்கி ஸ்டாலின் பிரபு பேசினார்.மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நகர செயலாளராக ஆர்.மூர்த்தி, துணைச் செயலாளராக கே.முருகேசன், பொருளாளராக எஸ்.சந்தானம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நடேசன், சின்னையா, வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய மாநாட்டில் 13 பேர் பிரதிநிதிகளாக கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.பேராவூரணி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு குடி மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி தாசில்தார்,எம்,எல்,ஏ, கோட்டாட்சியரிடம் வழங்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் எனவும் தவறினால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும், சொர்ணகாடு மற்றும் கீழக்காடு பகுதியில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே கீழ் பாலங்களை பஸ், கதிர் அறுக்கும் எந்திரங்கள், டிராக்டர் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றி புதிய பாலம் கட்டி தர வேண்டும்.

ஆத்தாளூர் மற்றும் சேது சாலை ரெயில்வே கிராசிங்கில் மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலம் கட்டி தரவேண்டும். நகரப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை மராமத்து பணிகளை பொதுமக்கள் நலன் கருதி வேகமாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பேரூராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் மற்றும் சொத்து வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News