search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் கட்டணம்"

    • 15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
    • அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் 25-வது கூட்டம் அதன் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை யில் நடைபெற்றது. ரவண சமுத்திரம் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், கீழக்கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத், ஏ.பி.நாடானூர் ஊராட்சி தலைவர் அழகுதுரை, முதலியார்பட்டி ஊராட்சி தலைவர் மைதீன் பீவி அசன் , தெற்கு கடையம் ஊராட்சி தலைவர் முத்துலெட்சுமி ராமதுரை, வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் ஸாருகலா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , ஊராட்சி தலைவர்களின் 3-வது ஆண்டு பதவி ஏற்பு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி நிதியில் இருந்து பணிகளை தேர்வு செய்ய ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

    இதனை கடையம் ஊராட்சி ஒன்றியத்திலும் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், டி.என். பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்துவிட்டு மீண்டும் பி.எப்.எம்.எஸ்.முறையை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிக்கான பணி நியமன உரிமம் ஊராட்சி தலைவர்களுக்கே வழங்க வேண்டும்.15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து வரும் தொகையை, குடிநீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணத்திற்கு பிடிப்பதை ரத்து செய்து விட்டு, ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

    மேலும் ஜல் ஜீவன் திட்டத்தை ஊராட்சி தலைவர்களே நிறைவேற்ற வேண்டும் என்று கருத்து கூறிய உயர்நீதி மன்ற நீதிபதி யின் கருத்திற்கு கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிப்பது, கலைஞர் உரிமை திட்டத் திற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதோடு, விடுபட்ட தகுதி உள்ள மகளிர்களுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் 6-வது நிதிக்குழு மானியத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கொண்டு வந்த அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது நடை முறைப்படுத்தாமல் உள்ளது. அதனை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ,கீழாம்பூர் மாரிசுப்பு, அடைச்சாணி மதியழகன், திருமலை யப்புரம் மாரியப்பன், மடத்தூர் முத்தமிழ் செல்லி ரஞ்சித், மந்தியூர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் தெற்கு மடத்தூர் ஊராட்சி தலைவர் பிரேம ராதா ஜெயம் நன்றி கூறினார்.

    • வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் 2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கால அவகாசத்தை மீறியும் நிலுவை கட்டணத்தை செலுத்தாததால் காங்கயம் நகராட்சி வாா்டு 14 மற்றும் வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என்றாா்.

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தகவல்
    • பொருட்காட்சி மைதானத்தில் இருந்த மணலை அப்புறப்படுத்துவதற்கு ரூ.22 லட்சம் செலவாகி உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலை மையில் இன்று நடந்தது. ஆணை யாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மண்டல தலைவர்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலவாணி, செல்வக் குமார், ஜவகர், கவுன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, அக்‌ஷயா கண்ணன், அனிலா சுகுமாரன், டி .ஆர். செல்வம், மேரி ஜெனட்விஜிலா, உதயகுமார்,சேகர், ரமேஷ், பால்அகியா, நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் கூறியதாவது;-

    நாகர்கோவில் மாநக ராட்சியுடன் தேரூர், தெங்கம்புதூர் பேரூராட்சி கள் இணைக்கப்பட்டது. தற்பொழுது அந்த பகுதி களின் குடிநீர் கட்டணமாக ரூ.135 வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மாநகரப் பகுதியில் குடிநீர் கட்டணமாக ரூ.55 மட்டுமே வசூல் செய்யப்பட்டு வரு கிறது. எங்கள் பகுதியை மாநகராட்சியுடன் இணைத்த பிறகு குடிநீர் கட்டணத்தை குறைக்கவில்லை.

    ஆனால் வரி உயர்வை மட்டும் உடனடியாக அமல்படுத்தியுள்ளனர்.எனவே குடிநீர் கட்டணத்தையும் உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மின் விளக்குகள் சரிவர எரியவில்லை. பலமுறை அதிகாரிகள் தொடர்பு கொண்ட பிறகும் மின்விளக்குகள் சரி செய்யப்படவில்லை. எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி 51- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அங்கும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதையடுத்து மேயர் மகேஷ் கூறியதாவது;-

    ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது நாகர்கோவில் நகருக்கு ரூ. 251 கோடி செலவில் புத்தன்அணை திட்டபணிகள் நடைபெற்று வருகிறது.அந்த திட்டத்தை செயல்படுத்தப்படும்போது அனைத்து வார்டுகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்யப்படும். தற்பொழுது உள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

    இது தொடர்பாக பரிசீலித்து ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மின் விளக்குகள் உடனடியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. அனுமதி இல்லாத இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் மின் விளக்கு வழங்க இயலாது.அந்த இடங்கள் அனுமதி பெற்ற பிறகு மின் விளக்குகள் வழங்கப்படும்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.15 கோடி வரி வசூல் அதிகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    தற்பொழுது ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 52 வார்டுகளிலும் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கும் என்னென்ன பணிகள் நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் பாராபட்சமின்றி அகற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தருகிறார்.

    முதல்-அமைச்சர் வரும்போது நாகர்கோவில் மாநகர பகுதியில் இனிவரும் ஐந்து ஆண்டுகளில் என்னென்ன பணிகள் நிறைவேற்ற எவ்வளவு நிதி தேவை என்பதை பட்டியலிட்டு அவர்களிடம் கோரிக்கையாக வைத்து அந்த நிதியை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொருட்காட்சி மைதானத்தில் இருந்த மணலை அப்புறப்படுத்துவதற்கு ரூ.22 லட்சம் செலவாகி உள்ளது.அங்கிருந்த மணலை விற்பனை செய்வதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக நியமிக்கப் பட்டுள்ள மேயர் மகேசுக்கு அ.தி.மு.க. காங்கிரஸ், த.மா.கா., மதிமுக கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    ×