search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water charges"

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது
    • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் சாலைகளில் தங்கும் நிலை உள்ளது. எனவே அவர்களுக்காக பஸ் நிலைய முதல் தளத்தில் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடிநீர் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு

    கூட்டத்தில் நெல்லை மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்த்துவதற்கு இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் இதற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கட்டண உயர்வு தீர்மானம் ஒத்திவைக்கப்பட்ட.து.

    பின்னர் மேயர் சரவணன் பேசியதாவது:-

    பொங்கல் பண்டிகையை யொட்டி ரேஷன் அட்டைதா ரர்களுக்கு ரூ.1,000 அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அமைச்சராக பதவி ஏற்றுள்ள தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் சாலைகளில் தங்கும் நிலை உள்ளது. எனவே அவர்களுக்காக பஸ் நிலைய முதல் தளத்தில் ஓய்வறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவதை யொட்டி குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்த்துவற்கு இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால் பெரும்பாலான கவுன்சிலர்கள், பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்ப தால் அதனை ஒத்தி வைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் பேசும் போது, ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் எனது வார்டு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் நடைபெற்று வருகிறது.

    அங்கு தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேடு அறை அமைக்க வேண்டும், பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கூறினார்.

    கவுன்சிலர் ரசூல் மைதீன் பேசும் போது, மேலப்பா ளையம் கன்னிமார் குளத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுப்ப தற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கூறினார்.

    கவுன்சிலர் முத்து சுப்பிர மணியன் கூறும்போது, மாநக ராட்சிக்கு சொந்த மான ஏராளமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்க வேண்டும். குடிநீர் கட்டணத்தை உயர்த்த கூடாது என கோரிக்கை விடுத்தார்.

    32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் பேசும் போது, குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பணியை தொடங்க வேண்டும். பாளை பஸ் நிலையத்தில் மீண்டும் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டை அமைக்க வேண்டும் என கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் தச்சை சுப்பிர மணியன், சுதா மூர்த்தி, கிட்டு என்ற ராம கிருஷ்ணன், கருப்ப சாமி கோட்டையப்பன், உலகநாதன், ரவீந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.

    கமிஷனர் பேச்சு

    தொடர்ந்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி பேசியதாவது:-

    2008-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் பாபநாசத்தில் இருந்து மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது. பின்னர் 2011-ம் ஆண்டு அரியநாயகிபுரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு இதற்காக ரூ.230 கோடி ஒதுக்கப்பட்டது.

    இதில் 10 சதவீத தொகையை மாநகராட்சி செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. 30 சதவீத தொகை வெளிநாடு வங்கி களிடம் இருந்து கடன் பெற முடிவு செய்யப்பட்டது.

    இந்த திட்டம் 2018-ம் ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். சில காரணங் களால் தாமதமாகி உள்ளது. இந்த தாமதத்தால் வட்டியுடன் சேர்த்து தற்போது திட்டத்திற்கு ரூ.332 கோடி தேவைப்படுகிறது.

    மேலும் முதலில் மாநகராட்சி பகுதிக்கு மட்டும் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. தற்போது வி.எம். சத்திரம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட விரிவாக்க பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதனால் மாநகராட்சி ரூ.332 கோடி ரூபாய் கடனில் உள்ளது. எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி உள்ளது.

    ரூ.35.63 கோடியில் முறப்பநாட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் வெற்றி பெற்றால் விரிவாக்க பகுதிகளுக்கு எளிதில் தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் 2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கால அவகாசத்தை மீறியும் நிலுவை கட்டணத்தை செலுத்தாததால் காங்கயம் நகராட்சி வாா்டு 14 மற்றும் வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என்றாா்.

    ×