கட்டணம் செலுத்தாததால் 4 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

காங்கயம்:

காங்கயம் நகராட்சியில் 2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கால அவகாசத்தை மீறியும் நிலுவை கட்டணத்தை செலுத்தாததால் காங்கயம் நகராட்சி வாா்டு 14 மற்றும் வாா்டு 16-க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என்றாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com