உள்ளூர் செய்திகள்
.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,27,356 பேர் பாதிப்பு

Published On 2022-03-20 08:52 GMT   |   Update On 2022-03-20 08:52 GMT
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,27,356 பேர் பாதிக்கப்பட்டனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக நேற்று யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 2 பேர் வீடு திரும்பினர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 6-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சேலம் மாவட்டத்தில் முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை சேர்த்து மொத்தம் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 588 பேர்  ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
Tags:    

Similar News