உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்- விலை குறைவால் விவசாயிகள் கவலை

Published On 2022-03-19 10:14 GMT   |   Update On 2022-03-19 10:14 GMT
ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஆலங்குளம்:

 ஆலங்குளம் வட்டாரத்தில் கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பின.  

இதனையடுத்து, ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது. பயிரிட்ட நாற்றுகள் நன்கு விளைந்த நிலையில் தற்போது நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. மேலும் பல வயல் கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

இங்கு நாளொன்றுக்கு 100 -க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் உள்ளூர் அரிசி ஆலை களுக்கும், அண்டை மாநில மான கர்நாடகா விற்கும் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் 75 கிலோ எடை கொண்ட அம்மன் பொன்னி நெல் மூட்டை ஒன்றிற்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரையே விலை போகிறது என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது தொடர்பாக  விவ சாயி ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு அம்மன் பொன்னி ரக நெல் மூட்டை ஒன்று ரூ.1,600-க்கு விற்பனை யானது.  தற்போது விலை குறைந்து விட்டது.

நெல் இருப்பு வைக்க விவசாயிகளிடம் போதிய இடவசதி இல்லாத நிலை மற்றும் ஆலங்குளம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையம் இல்லாத நிலையை பயன்படுத்தி வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை கொள் முதல் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக நெல் வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மூட்டை ஒன்று ரூ.1,400-க்கு கொள்முதல் செய்து விலையேறிய பின்பு விற்கலாம் என வங்கிகளில் கடன் வாங்கி கிட்டங்கியில் வைத்திருந்தும் விலை ஏறவில்லை. பழைய நெல்லுக்கு கிராக்கி உண்டு.

ஆனால் இந்த ஆண்டு நெல் வரத்து அதிகரித்துள் ளதால் விலை ஏறவில்லை. ஓராண்டு காத்திருந்தும் விலை ஏறாதது ஏமாற்ற மளிக்கிறது. இதனால் பல வியாபாரிகள் நஷ்டமடைந்துள்ளனர் என்றனர்.
Tags:    

Similar News