உள்ளூர் செய்திகள்
கோர்பேவேக்ஸ் தடுப்பூசி

கோர்பேவேக்ஸ் தடுப்பூசி அரசுக்கு ரூ.145, தனியாருக்கு ரூ.800-க்கு விற்பனை

Published On 2022-03-17 05:27 GMT   |   Update On 2022-03-17 05:27 GMT
பயாலஜிக்கல் நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் டோஸ் கோர்பேவேக்ஸ் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
சென்னை:

கோர்பேவேக்ஸ் தடுப்பூசி 12 முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு நேற்று முதல் போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை பயாலஜிக்கல் நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது.

உலகளவில் மிக குறைந்த விலையில் இந்த தடுப்பூசியை அரசுக்கு வழங்கி இருப்பதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகிமா டட்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சிறுவர்களுக்கான கோர்பேவேக்ஸ் தடுப்பூசி அரசுக்கு ரூ.145-க்கும், தனியாருக்கு ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அநேகமாக இது உலகிலேயே குறைந்த விலையாகக் கருதுகிறோம். தனியாருக்கு வரிக்கு முன்னதாக இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. மற்றும் நிர்வாக கட்டணத்தை சேர்த்து இந்த தடுப்பூசியின் விலை ரூ.990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் டோஸ் கோர்பேவேக்ஸ் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. சிறுவர் மற்றும் முதியவர்களுக்கான தடுப்பூசிகள் தனியார் சந்தையில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோர்பேவேக்ஸ் தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ.145-க்கு விற்கப்பட்ட போதும் அனைத்து மாநிலங்களுக்கும் அவை இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இந்த தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.


Tags:    

Similar News