உள்ளூர் செய்திகள்
.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு விலை சரிவு விவசாயிகள் கவலை

Published On 2022-03-11 07:54 GMT   |   Update On 2022-03-11 07:54 GMT
மரவள்ளி கிழங்கு விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம்:

சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் அதிக அளவில்  மரவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. அதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

குறிப்பாக ஐப்பசியில் தொடங்கி  பங்குனி மாதம் வரை மரவள்ளி கிழங்கு அறுவடை அதிகமாக  இருக்கும். அறுவடை காலத்தில்  பெய்த  மழையினால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  விலை குறைவாக இருந்தாலும் அறுவடை செய்ய வேண்டிய   நிலையில் விவசாயிகள் உள்ளனர். நேரடியாக மில்லுக்கு கிழங்கை கொண்டு சென்றால் வாங்குவதில்லை என கூறப்படுகிறது. இடைத்தரகர்கள் மூலம் மட்டும் வாங்கப்படுகிறது.

நாட்டு பர்மா ரக மரவள்ளி  ஒரு டன் ரூ.5 ஆயிரம், தாய்லாந்து ரகம் ரூ.6 ஆயிரம்,  குங்கும ரோஸ் மரவள்ளி ரூ.5 ஆயிரம்,  226 ரகம்  ரூ. 6 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

கடந்த ஆண்டை விட தற்போது டன்னுக்கு  1000 ரூபாய் வரை  விலை குறைந்துள்ளது.   எதிர்பார்த்த   விலை கிடைக்காததால்  விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News