உள்ளூர் செய்திகள்
இந்துசமய அறநிலையத்துறை ஆணையரிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு அளித்த காட்சி.

கோவில் கடை வாடகை தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையரிடம் சிவபத்மநாதன் கோரிக்கை மனு

Published On 2022-03-11 07:21 GMT   |   Update On 2022-03-11 07:21 GMT
இந்துசமய அறநிலையத்துறை ஆணையரிடம். கோவில் கடை வாடகை தொடர்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தென்காசி:

இந்து சமய அறநிலையத் துறை ஆணையரை நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் சிவபத்மநாதன் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

குற்றாலம் பேரூராட்சி குற்றாலநாதர் கோவில் இடத்தில் வியாபாரிகள் கடை வைத்து பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர்.  தமிழ்நாட்டில் எந்த கோவிலிலும் சதுர அடி வாடகை நிர்ணயம் செய்யவில்லை.
 
ஆனால் குற்றாலத்தில் கடந்த  2001-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் சதுர அடிக்கு ரூ. 7.31 வாடகை என்று நிர்ணயித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு உத்தரவு 455-ன் படி 15 சதவீதம் உயர்த்தவும் நிர்ணயம் செய்யப்பட்டது.  அதை வியாபாரிகள் ஏற்றுக் கொண்டு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரை வாடகை பாக்கி இல்லாமல் செலுத்தி உள்ளனர்.  

ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி  முதல் சதுர அடிக்கு ரூ. 20 வாடகை என்று கோவில் நிர்வாகத்தில் இருந்து தபால் கொடுத்துள்ளனர். சில கடைகளுக்கு ரூ. 21 -ம், சில கடைகளுக்கு ரூ. 22-ம்,  என்று ஒழுங்குமுறை இல்லாமல் உள்ளது. 

குற்றாலத்தை பொறுத்த அளவில் சீசன்காலம் 3 மாதமும், அய்யப்ப  பக்தர்கள் சீசன் 2 மாதம் என மொத்தம் 5 மாதங்களே வியாபாரம் நடைபெறுகிறது. மீதமுள்ள 7 மாதங்கள் வியாபாரம் இல்லாமல் கடைகள் அடைத்தே இருக்கும்.  இந்த 7 மாதத்திற்கும் சேர்த்தே வாடகை கட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். 

இந்த வாடகை பிரச்சனைக்காக  மதுரை உயர்நீதிமன்ற கிளை  வழக்குகள் நிலுவையில் உள்ளது. பழைய வாடகை பாக்கியே இன்னும் வசூல் ஆகாமல் உள்ள நிலையில் மீண்டும் புதிய வாடகை நிர்ணயத்திற்கான அறிவிப்பு விடப்பட்டுள்ளது . புதிய வாடகையை உடனே செலுத்த கோவில் நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. 

   மக்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் வியாபாரம் அதிகமாகவும் , மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் வியாபாரம் குறைவாகவும் உள்ளது. ஆனால் வாடகை அனை வருக்கும் ஒரே மாதிரியாக வசூல் செய்கின்றனர். இதனால் வியாபாரிகள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். 

எனவே வாடகை நிர்ணயக்குழு அமைத்து வணிகர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான வாடகையை நிர்ணயம் செய்திட ஆவணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News