உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் பெட்ரோல் பங்க்

பெட்ரோல் விலை உயரும் என்ற பீதியில் பங்க்குகளில் மக்கள் கூட்டம்

Update: 2022-03-08 08:52 GMT
பெட்ரோல் விலை உயரும் என்ற அச்சத்தில் திண்டுக்கல் பங்க்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது
திண்டுக்கல்:

சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலைஉயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி தற்போது 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை கடந்த 120 நாட்களுக்கு முன்பு இருந்த அதே விலையிலேயே நீடிக்கிறது.  தற்போது ரஷியா உக்ரைன் போர் சூழல் காரணமாக கச்சா  எண்ணெயின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெட்ரோல் பங்க்குகளில் தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மட்டுமின்றி கார் மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்களும் பெட்ரோல், டீசலை அதிக அளவில் நிரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வது எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்தாலும் மத்திய அரசு நினைத்தால் இதனை குறைக்க முடியும் என்பதற்கு தற்போது நிலவும் சூழலே சிறந்த உதாரணம். 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை எந்தவித விலையேற்றமும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது தேர்தல் முடிந்து விட்டதாலும், போர் சூழல் காரணமாகவும் எந்த நேரத்திலும் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வரலாம் என்ற அச்சத்தில் ஏராளமானோர் பெட்ரோல் பங்க்குகளை தேடி வருகின்றனர் என்றனர்.
Tags:    

Similar News