உள்ளூர் செய்திகள்
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வேஷ்டி, புடவைகள் வழங்கல்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Published On 2022-03-02 08:03 GMT   |   Update On 2022-03-02 08:03 GMT
கபிஸ்தலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாடினர்.
கபிஸ்தலம்:

கபிஸ்தலம் பாலக்கரையில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச் செல்வன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பிரபாகரன், முருகேசன், கணேசன், ஜெகதீசன், சசிகலா மகேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுமதி குணசேகரன், ராஜேந்திரன், விஜய் பிரசாத், காமராஜ், செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், , ஆனந்து, உள் பட கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பாபநாசம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் தி.மு.க கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அலவந்திபுரம் ஊராட்சியில் அலவந்திபுரம் கவுதமன் ஏற்பாட்டில் மாணவ&மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்புக், பேனா, பென்சில், மின்விசிறி, நாற்காலிகள், தூய்மைப் பணியாளர் களுக்கு சீருடைகள் மற்றும் பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலைகள், ஆகியவற்றை வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News