உள்ளூர் செய்திகள்
உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள்.

அவிநாசி, பெருமாநல்லூரில் நாளை கடைகள் அடைப்பு- விசைத்தறியாளர்கள் அறிவிப்பு

Published On 2022-02-24 06:59 GMT   |   Update On 2022-02-24 06:59 GMT
நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை தினத்தை தவிர்த்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
பல்லடம்:

கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த  ஜனவரி மாதம் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் பல்லடம் உள்ளிட்ட 4 சங்கங்கள் வாபஸ் பெற்றன. ஒப்பந்த வடிவில் கூலி உயர்வு அமலாக்க வலியுறுத்தி சோமனூர் உள்ளிட்ட 5 சங்கங்கள் போராட்டத்தை தொடர்கின்றன.

கடந்த 22-ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கிய விசைத்தறியாளர்கள் நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை தினத்தை தவிர்த்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 

சோமனூர் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:-

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பதுவம்பள்ளி, கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி, பெருமாநல்லூர், புதுப்பாளையம், சோமனூர், சாமளாபுரம், காரணம்பேட்டை, பருவாய் உள்ளிட்ட பகுதிகளில்நாளை 25-ந்தேதி கடை அடைப்பு நடத்தப்படும். இதற்கு வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் வேன் டிரைவர்கள், உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News