உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி

Published On 2022-01-29 08:51 GMT   |   Update On 2022-01-29 08:51 GMT
ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் தொடர்பான மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது.
தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களில் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் தொடர்பான மாநில அளவிலான பயிற்சிக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அல்லிராணி ஆலோசனை பேரில் விவசாயிகள் உடுமலைப்பேட்டை இளையமுத்தூரிலுள்ள ஜெயின் இரிக்கேசன் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.   

அங்கு நுண்ணீர் பாசனத்தின் முறைகள், அவற்றின் பயன்கள், கருவிகள் பராமரிப்பு முறைகள், நீரில் கரையும் உரமிடும் முறைகள், பசுமை குடிலின் காய்கறி சாகுபடி முறைகள் குறித்து நிறுவன உற்பத்தி தர மேலாளர் பாலகுமார், விரிவாக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் ஆகியோர் நுண்ணீர் பாசன முறைகளை விளக்கி கூறினார்கள்.

மேலும் நுண்ணீர் பாசன வயல்களுக்கு விவசாயிகளை அழைத்து சென்று பயிற்சியும் செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகள் சுமார் 40 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சியில் கொரானா விதிகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் நடத்தப்பட்டது.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர் ராஜலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News