உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்

மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்

Published On 2022-01-24 10:42 GMT   |   Update On 2022-01-24 10:42 GMT
சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து மாநகராட்சி ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துப்பிரிவு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தனியார் மயம், சம்பளம் வழங்குவதில் முறைகேடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. 

மாநகராட்சி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பாலசுப் பிரமணியன், சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் அம்சராஜ், துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க மாநகர் மாவட்ட அமைப்பாளர் பூமிநாதன், பொறியியல் பிரிவு பணியாளர் சங்க தலைவர் முருகன், பொறியியல் பிரிவு பணியாளர் சங்க தலைவர் மகுடீஸ்வரன், தூய்மை பணி மேற்பார்வையாளர் சங்க தலைவர் முருகன் உள்பட 500-&க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி கமிஷனரிடம் சங்க நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகராட்சி சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அவுட்சோர்சிங் முறை அமலில் உள்ளது. அங்கு பணியாளர் எண்ணிக்கை குறித்து போலிகணக்கு காண்பித்து சம்பளம் பெறு கின்றனர். பணியாளர்களுக்கு மிகவும் சொற்பமான ஊதியமே வழங்கப்படு கிறது. 

குறிப்பாக பாதாளச்சாக்கடை பணியாளருக்கு ரூ.13,500&-க்கு பதிலாக ரூ.11,500-ம், தெருவிளக்கு பணியாளருக்கு ரூ.15,000-க்கு பதிலாக ரூ.12,500ம், பம்பிங் ஸ்டேசன் பணியா ளருக்கு ரூ.13,500-&க்கு பதிலாக ரூ.10,500ம், தொழில்நுட்ப உதவி யாளருக்கு ரூ.26,500-க்கு பதிலாக ரூ.10,500-ம் வழங்கி வருகின்றனர். இது நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் ஊழல் நடவடிக்கை ஆகும்.

வருகைப்பதிவேடு முறைகேட்டிலும், நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி ஊழலிலும் திளைக்கும் அனைத்து உதவி பொறி யாளர்கள் மற்றும் மின் கண்காணிப்பாளர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பணியிறக்கம் செய்து முழுமையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மாநகராட்சி கமிஷனரிடம் கொடுத்த கோரிக்கை மனுவுடன் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News