உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

வாழை அங்கக பண்ணையில் அதிகாரி ஆய்வு

Update: 2022-01-23 05:26 GMT
அங்கக முறையில் சாகுபடி செய்யப்படும் விளைபொருட்களுக்கு சந்தை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அவிநாசி:

அவிநாசி வட்டாரம் கானூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவரது பண்ணையில் 4.5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி வயலை கோவை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் சுப்பையா ஆய்வு செய்தார். 

செம்பியநல்லூரில் சிவகுமார் என்பவர் 2 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழை அங்கக பண்ணையையும் பார்வையிட்டார்.’அங்கக முறையில் சாகுபடி செய்யப்படும் விளைபொருட்களுக்கு சந்தை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‘ என விதை சான்று அலுவலர் உறுதியளித்தார். 

மேலும் அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள விதை விற்பனை நிலையத்தையும் ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் ஜெயராமன், விதை சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து (திருப்பூர்), மோகனசுந்தரம் (ஈரோடு), அவிநாசி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மாலதி  உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News