உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

ரூ.20-க்கு கரும்புகள் விற்பனை

Update: 2022-01-23 05:03 GMT
எதிர்பாராத விதமாக கொரோனாவால் தைப்பூச திருவிழா ரத்து செய்யப்பட்டுவிட்டது.
திருப்பூர்:

மாட்டுப் பொங்கல் மற்றும் தைப்பூசத் திருவிழாவின் போது மட்டுமே செங்கரும்பு அதிக அளவில் விற்பனையாகிறது. அதை எதிர்பார்த்து விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். மாட்டுப்பொங்கல் தினத்தில் ஒரு கரும்பு 50 ரூபாய்க்கு விலை போனது. 

தைப்பொங்கலுக்கு ஓரளவு விற்பனையான நிலையில் தைப்பூசத் திருவிழாவின் போது அதிக அளவில் கரும்பு விற்பனை செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக கொரோனாவால் தைப்பூச திருவிழா ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால் தைப்பூசத் திருவிழாவில் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படியாவது கரும்பை விற்றுவிட வேண்டும் என்று விவசாயிகள் முருகன் கோவில் வளாகங்களில் கரும்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

முன்பு 50 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் சிவன்மலை உள்ளிட்ட முருகன் கோவில்களில் 20 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்டது. 

மலிவுவிலைக்கு கரும்பு விற்பனை செய்யப்பட்டதால் சிவன்மலை முருகன் கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் கட்டு கட்டாக கரும்பை அள்ளிச் சென்றனர்.
Tags:    

Similar News