search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Canes"

    • கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.
    • கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலைக்கு கரும்பு கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்து அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.நடப்பாண்டு கரும்பு பதிவு அதிகரித்து ஆலை அரவைக்கு 3 ஆயிரத்து 10 ஏக்கர் கரும்பு பதிவு செய்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஆலையில் கரும்பு அரவை துவங்கியது. ஆனால் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து குறித்த நேரத்தில் கரும்பு கொள்முதல் செய்யாதது, முன்னுரிமை பட்டியல்படி வெட்டு ஆட்கள் அனுப்பாமல், பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரெட்டிபாளையம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கொமரலிங்கம் சர்க்கரை கட்டுப்பாட்டு பகுதியில் பல்வேறு குளறுபடிகளால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.கரும்பு வெட்டுவதற்கான முன்னுரிமை பட்டியலை பின்பற்றாமல், கவனிப்பு அடிப்படையில் கரும்பை கொள்முதல் செய்தனர்.

    இதனால் சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களில் குறித்த நேரத்தில் அறுவடை செய்யாமல் கரும்பு சக்கையாக மாறியது.வெளியிலும் விற்க முடியாமல் ஓராண்டு உழைத்து வளர்த்த கரும்பை தீயிட்டு அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், கூட்டுறவு சர்க்கரை ஆலை மீதான நம்பிக்கையையும் இழந்துள்ளோம்.இது குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கொமரலிங்கம் கரும்பு கட்டுப்பாட்டு பகுதியில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×