உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை

மாநிலம் முழுவதும் செல்லும் அலங்கார ஊர்திக்கு பா.ஜனதா வரவேற்பு- அண்ணாமலை

Published On 2022-01-21 06:48 GMT   |   Update On 2022-01-21 06:48 GMT
தமிழகத்தில் குடியரசு தினத்தன்று காட்சிபடுத்தப்படும் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் செல்வதை பா.ஜனதா வரவேற்பதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை:

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழகம் சார்பில் அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டது.

விடுதலை போராட்ட வீரர்களான வ.உ.சி., வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோரது உருவங்கள் அந்த ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தேர்வு குழுவால் அந்த ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்த விவாகரத்தை தொடர்ந்து அந்த ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் காட்சிபடுத்தப்படும் என்றும், அதன் பிறகு மாநிலம் முழுவதும் செல்லும் என்றும் முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
அறிவித்தார்.

மாநிலம் முழுவதும் அலங்கார ஊர்தி செல்வதை பா.ஜனதா வரவேற்றுள்ளது. இது பற்றி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழகத்தில் குடியரசு தினத்தன்று காட்சிபடுத்தப்படும் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் செல்வதை பா.ஜனதா வரவேற்கிறது.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை என்பது தி.மு.க.வின் இந்த மாத கோட்டா. அவ்வளவு தான்.

குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News