உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

திருப்பூரில் பி.எம்.எஸ்.,சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-20 10:42 GMT   |   Update On 2022-01-20 10:42 GMT
65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும்.
திருப்பூர்:

நாட்டில் உள்ள அனைத்து வகையான ஓய்வூதிய திட்டத்திலும் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் வகையில் திட்டத்தை வகுத்திட வேண்டும்.

குறைந்தபட்ச பென்சன் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு  சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் அவர்களை ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எம்.எஸ். சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  
Tags:    

Similar News