உள்ளூர் செய்திகள்
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பட்டர் புரூட் பழங்கள்.

கொடைக்கானலில் பட்டர் புரூட் விலை உயர்வு

Published On 2022-01-20 08:26 GMT   |   Update On 2022-01-20 08:26 GMT
கொடைக்கானல் சீசன் நிறைவடையும் நிலையில் பட்டர் புரூட் விலை உயர்ந்துள்ளது.
கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைக்கிராமப் பகுதிகளான பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை, குண்டுப்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் மருத்துவ குணம் கொண்ட பட்டர் புரூட் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

மேலும் இந்த பழத்தினை தமிழில் (அவக்கோடா) வெண்ணை பழம் என்றும் அழைக்கப்படுகிறது. பட்டர் புரூட் பழம் வயிற்றுப் புண், உடல் சூட்டினை தணிக்கவும் மற்றும் முகத்திற்கு பேஷியல் கிரீம் செய்வதற்கும் உபயோகப் படுத்தப்படுகிறது.

பட்டர் புரூட் பழத்தினை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களான கோவா, பெங்களூர், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விவசாயிகள் மற்றும் பழ வியாபாரிகள் ஏற்றுமதி செய்துவருகின்றனர்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பட்டர் புரூட் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சீசன் துவங்கியது.தற்போது நிறைவடையும் நிலையில் பட்டர் புரூட் விலை உயர்ந்துள்ளதால் மலைக்கிராம விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ பட்டர் புரூட் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்த நிலையில் தற்போது 1 கிலோ பட்டர் புரூட் ரூ. 240 முதல் ரூ.250 வரை விற்பனையாவதால் மலைக்கிராம விவசாயிகள் மற்றும் பழ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இனி வரும் நாட்களில் ரூ. 300 வரை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மலைக்கிராம விவசாயிகள் மற்றும் பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News