உள்ளூர் செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

Published On 2022-01-20 06:01 GMT   |   Update On 2022-01-20 06:01 GMT
நாமக்கல் மண்டலத்தில் இம்மாத தொடக்கத்தில் முட்டை விலை ரூ.5.05 ஆக இருந்தது. பின்பு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டதால் விலை சரிவடைந்து ரூ.4.80 ஆனது.
நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர்.

அதன்படி முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக குறைந்து உள்ளது.

பொங்கல் பண்டிகை, தைப்பூச உள்ளிட்ட விழாக்களால் முட்டை விற்பனை சரிந்தது. இந்நிலையில் முட்டை உற்பத்தி அதிகரித்ததை தொடர்ந்து முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்துள்ளதாக கோழிப் பண்ணையாளர் தர்மலிங்கம் தெரிவித்தார். மேலும் அடுத்த வாரத்தில் முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

நாமக்கல் மண்டலத்தில் இம்மாத தொடக்கத்தில் முட்டை விலை ரூ.5.05 ஆக இருந்தது. பின்பு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டதால் விலை சரிவடைந்து ரூ.4.80 ஆனது. பின்பு கடந்த 17-ந்தேதி முட்டை விலை ரூ.4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பின்னர் இன்று மேலும் 20 காசுகள் குறைந்துள்ளது.
Tags:    

Similar News