உள்ளூர் செய்திகள்
டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு எம்.பி.யின் வீட்டில் கொள்ளை- போலீஸ் விசாரணை

Published On 2022-01-19 11:12 GMT   |   Update On 2022-01-19 11:58 GMT
தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள டி.ஆர்.பாலுவின் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மன்னார்குடி:

தி.மு.க. பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் வீடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ளது. மர்ம நபர்கள் இந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News