உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையை கலக்கிய கொள்ளையர்கள் கைது

Published On 2022-01-19 11:00 GMT   |   Update On 2022-01-19 11:00 GMT
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் 4பேரும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடுமலை:

உடுமலை குறிஞ்சேரியிலுள்ள ஆண்டாள் நாச்சியார் கோவிலில் கடந்த 15-ந் தேதி இரவு உள்ளே புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கோவில் பூட்டை உடைத்து ஆண்டாள் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலி, தங்கப்பொட்டு ஆகியவற்றை திருடிச்சென்றனர். 

மேலும் உண்டியலை உடைத்து அதிலிருந்த நகை, பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கிராமமக்கள், கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். 
 
விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்த மூர்த்தி (வயது34), நிலக்கோட்டையை சேர்ந்த வேலன் (19), மடத்துக்குளம் போத்தநாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி ( 25) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.  

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News