உள்ளூர் செய்திகள்
குளத்தில் கூடிய மக்கள் கூட்டம்.

உடன்குடியில் சுற்றுலா தலங்களாக மாறிய குளங்கள்

Published On 2022-01-19 09:45 GMT   |   Update On 2022-01-19 09:45 GMT
உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அருணாசலபுரத்தில் உள்ள குளங்களை காண அப்பகுதி மக்கள் கூட்டமாக வரத்தொடங்கியதால் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.
உடன்குடி:

உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அருணாசலபுரத்தில் இருந்த 2 ஏக்கர் அய்யனார்குளம், வெள்ளாளன்விளை அருகே 7 ஏக்கர்மானாட்சிகுளம் ஆகிய கிராம புற குளங்கள்40 ஆண்டுகளுக்குப் பின்பு கண்டுபிடிக்கபட்டு சுற்றுப்புற பகுதி கிராம மக்களின் முழு பங்களிப்புடன் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது.

இக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டு, கால்வாயில் இருந்த காட்டுச்செடிகள், மரங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு தற்போதுஅருகிலுள்ள சடையநேரி குளத்திலிருந்து இந்த குளத்திற்கும் தண்ணீர் வந்தது. 

குளம்நிரம்பும் வரை தண்ணீர் வந்துவிட்டது. இதனால்சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராம மக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

நிலத்தடி நீர் நல்ல குடி நீராக மாறும். கிணற்று நீர் பாசன விவசாயம் செழிக்கும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

பொங்கல் விழாவை யொட்டிஅரசு விடுமுறை என்ப தால் சுற்று பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக அய்யனார் குளத்திற்கும், மானாட்சி குளத்திற்கும்சென்று குளிப்பதும், வீட்டில்இருந்து கொண்டுவந்தசாப்பாட்டை குளக்கரையில் இருந்து ரசித்து சாப்பிட்டு மகிழ்வதுமாக உள்ளனர். 

முன்பு உடன்குடி வட்டார பகுதி மக்கள் பொழுது போக்குக்காக மணப்பாடு, குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியை தான் தேடி செல்வார்கள்.

இப்போது 40 ஆண்டுகளுக்கு பின்பு உருவான குளத்தாங்கரைகளை தேடி செல்கின்றனர்.
Tags:    

Similar News