உள்ளூர் செய்திகள்
மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும்- அமைச்சர் தகவல்

Published On 2022-01-18 12:34 GMT   |   Update On 2022-01-18 13:12 GMT
தமிழகத்தில் இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: 

சென்னை சைதாப்பேட்டையில் இல்லம் தேடி கூடுதல் தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமைகள் தோறும் மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் இடங்களில் வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.


இனிமேல் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கென்று, சிறப்பு முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கென்று சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகான கொரோனா பாதிப்பு இன்னும் இரண்டு நாள்களுக்குப் பின்னர் தெரியவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News