உள்ளூர் செய்திகள்
மின்சார ரயில்

மானாமதுரை-ராமநாதபுரம் மின்சார ரயில் பாதையில் விரைவில் சோதனை ஓட்டம்

Update: 2022-01-18 11:14 GMT
மின்பாதை பணிகள் முடிவடைந்து உள்ளதால் மானாமதுரை-ராமநாதபுரம் மின்சார ரயில் பாதையில் விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம்


மதுரை ரெயில்வே கோட்டத்தில் பெரும்பான்மையான ரெயில் வழித்தடங்கள் மின்சார மயமாக்கப்பட்டு விட்டது. 

மதுரை-மானாமதுரை-ராமநாதபுரம்-ராமேசு வரம் வழித்தடம் நீண்ட காலமாக மின்சார மயமாக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு மதுரை-ராமநாதபுரம் இடையே யான ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணி தொடங்கியது.

அதில் முதல் கட்டமாக மதுரை-மானாமதுரை இடையேயான 50 கி.மீ. தூரத்திற்கு ரெயில்பாதை மின்மயமாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவுற்றது. தற்போது மதுரை&மானாமதுரை மின்சார ரெயில்பாதை மின்சார ரெயில்களை இயக்க தயார் நிலையில் உள்ளது. 


அடுத்த கட்டமாக மானாமதுரை-பரமக்குடி-ராமநாதபுரம் இடையே மின்மயமாக்கும் பணி தொடங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. சுமார் 70 கிலோமீட்டர் தூரமுள்ள மானாமதுரை-ராமநாதபுரம் மின்சார ரெயில்பாதையில் விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. 

இந்த மின்சார ரெயில்பாதையில் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று விரைவில் சோதனை ஓட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளது. 

இந்தமாத இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

ராமநாதபுரம் வரை சோதனை ஓட்டம் முடிந்து  தகுதிச்சான்று வழங்கப்பட்டவுடன் ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களிலும் மின்சாரத்திலும், டீசலிலும் இயங்கும் என்ஜின்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News