உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2022-01-18 10:56 GMT   |   Update On 2022-01-18 10:56 GMT
வாழை ஓராண்டு சாகுபடியாகும். பழத்தார்கள் அறுவடையுடன் முடிந்து விடும்.
உடுமலை

உடுமலை பகுதிகளில் தென்னை, நெல், கரும்பு, மக்காச்சோளம், சோளம் பல்வேறு தானிய பயிர்கள், காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது ஏழு குளம் பாசன பகுதி மற்றும் அமராவதி பாசனப்பகுதி என பரவலாக  வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

உடுமலை சுற்றுப்பகுதிகளில்  செவ்வாழை, கதளி, கற்பூரவல்லி மற்றும் இலை அறுவடை செய்தல் என வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இலை வாழையை பொறுத்தவரை நான்கரை மாதத்தில் இருந்து 2 நாளைக்கு ஒரு முறை இலை வாழை அறுவடை செய்யப்பட்டு, 1 ஆண்டு வரை சாகுபடி காலம் நீடிக்கிறது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வாழை ஓராண்டு சாகுபடியாகும்.  

பழத்தார்கள் அறுவடையுடன் முடிந்து விடும். ஒரு சில பகுதிகளில் வாழைக்காய் மற்றும் இலை என இரு பயன்பாடு அடிப்படையில்  நாட்டு கன்றுகள் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. 

இதனால் இலை மற்றும் வாழை காய், பழம் ஆகியவை  மற்ற மாவட்டங்களில்  இருந்து வரத்து குறைந்து உள்ளூர் வரத்து அதிகரித்துள்ளது  என்றனர்.
Tags:    

Similar News