உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் முழு ஊரடங்கை பயன்படுத்தி இணையதள உணவு சேவைகளுக்கு கட்டணத்தை உயர்த்திய நிறுவனங்கள்

Published On 2022-01-17 06:58 GMT   |   Update On 2022-01-17 06:58 GMT
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் செல்போன்கள் மூலமாக உணவு ஆர்டர்கள் செய்ய தொடங்கிவிட்டனர்.
திருப்பூர்:

முழு ஊரடங்கான நேற்று இணையதள உணவு சேவைகளுக்கு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இணையதளத்தில் ஆர்டர் செய்தால் உணவுகளை நமது வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் சேவையை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன. 

ஒவ்வொருவரும் அவசர நேரங்களில் இந்த சேவையை பயன்படுத்தி, தங்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர்கள் செய்து உண்டு மகிழ்ந்து வருகிறார்கள். திருப்பூர் போன்ற பெருநகரங்களில் இந்த சேவையை பலர் பயன்படுத்தி வருகிறார்கள். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் செல்போன்கள் மூலமாக உணவு ஆர்டர்கள் செய்ய தொடங்கிவிட்டனர். இதற்கிடையே முழு ஊரடங்கான நேற்று உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனால் திருப்பூர் பகுதிகளில் சிலர் உணவ கங்களுக்கு வந்து பார்சல் வாங்கி சென்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் ஊரடங்கு நாளில் வெளியே செல்வதை தவிர்க்கும் பொருட்டு இணையதளத்தில் உணவுகளை ஆர்டர்கள் செய்தனர். 

முழு ஊரடங்கு என்பதால் இணையதள நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகளவு வந்தது. இதன் காரணமாக மற்ற நாட்களை காட்டிலும் உணவுகள் மற்றும் வினியோக கட்டணம் ரூ.15 வரை உயர்ந்திருந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். 

முழு ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலையில் இணையதள உணவு சேவை நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கட்டணங்களை உயர்த்தக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News