உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் ஜவுளிக்கடை பெண் ஊழியர் மாயம்

Update: 2022-01-16 06:36 GMT
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நெல்லையில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் மாயமானார்.
நெல்லை:

வீரவநல்லூர் அருகே உள்ள அரிகேசவநல்லூர் சோலியர் தெருவை சேர்ந் தவர் கணபதி. இவரது மகள் இளவரசி (வயது25).

இவர் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி இருந்து ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 13&ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வதாக நிறுவன மேலாளரிடம் கூறி விட்டு விடுப்பு எடுத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் 14&ந்தேதி கணபதி தனது மகளை அழைத்து செல்வ தற்காக ஜவுளிக்கடைக்கு வந்து பார்த்த போது அவர் முந்தைய நாளே விடுப்பு எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி யடைந்த கணபதி தனது உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தார். ஆனால் இளவரசியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மேலப் பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News