உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

காங்கிரஸ் சார்பில் கலெக்டரிடம் மனு

Published On 2022-01-10 11:03 GMT   |   Update On 2022-01-10 11:03 GMT
பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்கு சுற்றுப் பயணம் செய்தபோது விவசாயிகள் போராட்டம் காரணமாக நடுவழியில் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
திருப்பூர், 

பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்கு சுற்றுப் பயணம் செய்தபோது விவசாயிகள் போராட்டம் காரணமாக நடுவழியில் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதி முக்கிய பிரமுகர் பாதுகாப்பில் மிகப்பெரிய தவறு நிகழ்ந்துள்ளதாக பஞ்சாப் காங்கிரஸ் அரசு மீது குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்ச கம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இது தொடர்பாக விளக்கம்  கேட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் இதை விசாரித்து வருகிறது.
ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு மீது திட்ட மிட்டு பழி சுத்தப்படுவதாக காங்கிரஸ் கூறி வருகிறது. 

இது தொடர்பாக இன்று உண்மை நிலையை விளக்கி தமிழகம் முழுவதும் கவர்னருக்கு அனுப்ப கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் திருப்பூர் கலெக்டர் வினீத்தை சந்தித்து மனு கொடுத்தனர். இதில் நிர்வாகிகள் ஈஸ்வரன், கோபால்சாமி, மகளிர் காங்கிரஸ் தீபிகா அப்புகுட்டி, விவசாய அணி தலைவர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News